கோட்டா அவதியுறுகிறார்: பசில்

🕔 December 13, 2022

லங்கையின் மக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்வதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதியுறுவதாக அவரின் சகோதரர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பசில் ராஜபக்ஷ,, முன்னாள் ஜனாதிபதி மக்களுக்காக தியாகம் செய்ததாகவும், அதன் விளைவாக துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறினார்.

இதேபோன்ற தியாகத்தை நீங்கள் செய்வீர்களா என பசில் ராஜபக்ஷவிடம் அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது, தேவை ஏற்படும் நேரத்தில் தனது இரட்டை குடியுரியை கைவிடத் தயாராக உள்ளதாக பதில் வழங்கினார்.

“தேவை ஏற்படும் போது செய்வேன். எனினும், தற்போது அவ்வாறான தேவை இல்லை” என பசில் இன்போது குறிப்பிட்டார்.

நீங்கள் இரட்டைக் குடியுரிமையைத் துறப்பீர்களா? அல்லது இது தொடர்பாக அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​அது சாத்தியமாகும், ஆனால் தற்போதைய தேவையின் அடிப்படையில் செயல்படத் தயாராக இருப்பதாக பசில் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி பீதி அடையாமல் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்தால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்திருக்க முடியும் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்