அட்டாளைச்சேனையில் போதைக்கு எதிரான நடைபவனியும், கருத்தரங்கும்: பொதுமக்களுக்கும் அழைப்பு

🕔 December 15, 2022

போதைப் பொருருக்கு எதிரான விழிப்புணர்வுக் கருந்தரங்கு ஒன்று, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் (17) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

‘நாம் ஊடகர் பேரவை’ ( We Journalists Forum) நடத்தும் இந்த நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வை.எம்.எம்.ஏ அமைப்பின் அட்டாளைச்சேனை கிளையினர் அனுசரணை வழங்குகின்றனர்.

இந்தக் கருத்தரங்கு முன்னதாக – போதைப் பொருளுக்கு எதிரான நடைபவனியொன்றும் இடம்பெறவுள்ளது.

எதிர்கால சந்ததியினரை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு நடத்தப்படும் இந்த நிகழ்வுகளை, எதிர்காலத்தில் ஏனைய பாடசாலைகள் மற்றும் ஊர்களிலும் நாம் ஊடகர் பேரவை (We Journalists Forum) நடத்த திட்டமிட்டுள்ளது.

போதைப் பொருளுக்கு எதிரான மேற்படி நடைபவனியில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சனிக்கிழமை காலை நடைபெறவுள்ள போதைப் பொருளுக்கு எதிரான நடைபவனியில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களும் அழைக்கப்படுகின்றனர்.

அறபா வித்தியாயலயத்தில் மாணவர்களுக்காக நடத்தப்படும் கருத்தரங்கில் வளவாளராக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் கலந்து கொள்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்