பேரரசரின் மீள் வருகை

பேரரசரின் மீள் வருகை 0

🕔14.Jul 2015

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும், ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு

மேலும்...
மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி

மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி 0

🕔14.Jul 2015

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாபதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்; “ஐ.ம.சு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்  தலைவர்கள் அனைவரும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க வேண்டும் எனக் கூறினார்கள்.

மேலும்...
அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம்

அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம் 0

🕔14.Jul 2015

பள்ளிவாசல்கள்,  ஆலயங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கும்  தீவிரவாதக் குழுக்களுக்கு உந்துதலை வழங்குவதோடு, அக்குழுக்களுக்கு – அரச அனுசரணையினைப் பெற்றுக் கொடுத்த யுகம் மாறிவிட்டது என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சரும்,  கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி வேட்பாளருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான – ஐ.தே.கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – இன்று

மேலும்...
ரமழான் மாதத்தினையொட்டி, உலர் உணவு விநியோகம்

ரமழான் மாதத்தினையொட்டி, உலர் உணவு விநியோகம் 0

🕔14.Jul 2015

யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹுஸைனியா நகர் மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய கிராமங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு – ரமழான் மாதத்தினையொட்டி விசேட உலர் உணவுப் பொதிகள் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.சின்னப்பாலமுனை ‘சீட்ஸ்’ சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில், ‘இஸ்லாமிக் ரிலீஃப்’ நிறுவனத்தினால், இவ்

மேலும்...
வேட்புமனுத் தாக்கலின் பின்னர் மு.கா. தலைவர்….

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் மு.கா. தலைவர்…. 0

🕔13.Jul 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – வேட்புமனுவினைத் தாக்கல் செய்ததன் பின்னர், கண்டி மீராம் மக்காம் பள்ளிவாசலுக்குச் சென்று, தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டதோடு, ஆதரவாளர்களையும் சந்தித்துப் பேசினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மு.கா. தலைவர் ஹக்கீம், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடுகின்றார். இதன்போது, ஐ.தே.கட்சியின் மற்றுமொரு வேட்பாளரான

மேலும்...
நான்கு வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்டத்தில் நிராகரிப்பு

நான்கு வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்டத்தில் நிராகரிப்பு 0

🕔13.Jul 2015

– யூ.எல்.எம். றியாஸ், எம்.சி. அன்சார் –எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அம்பாறை மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும், 20 சுயேட்சைக் குழுக்களும் வேட்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.இவற்றில் 03 சுயேட்சைக் குழுக்களினதும், ‘ஒக்கம ரெசியோ ஒக்கம ரஜவரு’ எனும் கட்சியினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துசித பீ. வணிகசிங்க

மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு 0

🕔13.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,  ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி,

மேலும்...
தொழுகை, பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், களத்தில் இறங்கினார் ஹரீஸ்

தொழுகை, பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், களத்தில் இறங்கினார் ஹரீஸ் 0

🕔13.Jul 2015

– ஹாசிப் யாஸீன் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, இன்று தனது ஆதரவாளர்களுடன் அம்பாறை கச்சேரிக்கு வருகை தந்திருந்தார்.முன்னதாக, கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தொழுகையிலும், பிரார்த்தனைகளிலும் ஈடுபட்ட அவர் – பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள் மற்றும் ஊர் மக்களின்

மேலும்...
தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி

தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி 0

🕔13.Jul 2015

– அப்துல் அஸீஸ் –சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) அமைப்பின் மாகாண மற்றும் மாவட்ட  அமைப்பாளர்களுக்கு,  தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை பாதுக்க ‘கித்துல் கன்ந்த’  ரிசோட் மண்டபத்தில்  இடம்பெற்றது.இந்நிகழ்வில், நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தேர்தல் கண்காணிப்புக்கான  பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்

மேலும்...
பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாய்

பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாய் 0

🕔13.Jul 2015

குவைத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவரை, அந்த நாட்டுப் பொலிஸார் கைது செய்து விசாரித்ததில், அந்நபரின் வங்கிக் கணக்கில் 05 லட்சம் குவைத் டினாருக்கும் அதிகமான தொகை (இலங்கை நாணயத்தில் 20 கோடி ரூபாய்) வைப்பிலிடப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர் வெளிநாட்டினைச் சேர்ந்தவராவார். குவைத் நகரப் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில்

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது

அமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது 0

🕔13.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் –அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது, முதன் முறையாக, அம்பாறை மாவட்டத்தில் தனது ‘மயில்’ சின்னத்தில் தேர்தலொன்றில்  போட்டியிடுகின்றது. இந்த நிலையில், அ.இ.ம.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் – வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில், முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதற்கிணங்க, அவரின் தலைமையில்,  09  பேர் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேற்படி பட்டியலில் – அமைச்சர்

மேலும்...
மு.கா. தலைமையின் அதிரடி முடிவு; அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்கள்; நள்ளிரவு தாண்டி கையொப்பமிட்டனர்

மு.கா. தலைமையின் அதிரடி முடிவு; அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்கள்; நள்ளிரவு தாண்டி கையொப்பமிட்டனர் 0

🕔13.Jul 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அபேட்சகர்கள், மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர், ஐ.தே.கட்சியின் வேட்புமனுவில் – நேற்று நள்ளிரவு தாண்டிய நிலையில் சிறிகொத்தவில் வைத்து கையொப்பமிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ. எம். மன்சூர்

மேலும்...
அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் கையெழுத்திடவில்லை; தொடர்கிறது இழுபறி

அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் கையெழுத்திடவில்லை; தொடர்கிறது இழுபறி 0

🕔12.Jul 2015

அம்பாறை மாவட்டத்தில், ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள் – இதுவரை வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை. அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்களை மட்டுமே ஐ.தே.கட்சி சார்பாக நிறுத்துவதென மு.கா. தீர்மானித்துள்ளதாகவும், அது குறித்த இழுபறிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது. ஆயினும், மு.கா.வின் வேட்பாளர்கள் – ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது நிலைகொண்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில்,

மேலும்...
மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை

மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை 0

🕔12.Jul 2015

– அஸ்ரப்  ஏ. சமத் – ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் – அமைச்சர் ராஜித சேனாரத்ன, மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர், இன்று காலை – அலரி மாளிகையில் வைத்து, இரு வெவ்வேறு எழுத்துமூல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து பிரிந்து வந்துள்ள, அமைச்சர் ராஜத குழுவினரும், சிஹல உறுமய கட்சினரும், ஐ.தே.கட்சியினருடன் இணைந்து – நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணி

மேலும்...
ராஜித குழுவிலிருந்து 07 பேர் பின்வாங்கல்; மைத்திரி, மஹிந்த பின்னணியில் உள்ளதாக சந்தேகம்

ராஜித குழுவிலிருந்து 07 பேர் பின்வாங்கல்; மைத்திரி, மஹிந்த பின்னணியில் உள்ளதாக சந்தேகம் 0

🕔12.Jul 2015

– அஸ்ரப்  ஏ. சமத் –அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரோடு இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட, ஐ.ம.சு.முன்னணியின் 13 பிரமுகர்களில், 07  பேர் பின்வாங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.இதனால்,  அமைச்சர் ராஜிதவின் குழுவில், 06 பேர் மட்டுமே  எஞ்சியுள்ளனா். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து அமைச்சர் ராஜிதவோடு இணைந்து சென்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்