கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில், அமான் அஷ்ரப் கருத்து

🕔 May 18, 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவாக கல்முனையில் ‘அஷ்ரப் அருங்காட்சியகம்’ ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், அதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், இதனுடன் தனக்கோ தனது தாய்க்கோ எவ்வித தொடர்பும் இல்லை என, அஷ்ரப்பின் மகன் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்தில் இது தொடர்பாக – அமான் அஷ்ரப் பதிவொன்றை இட்டுள்ளார்.

தனது தந்தை உயிருடன் இருந்தால்; ‘திகாமடுல்ல மாவடத்திலுள்ள இளைஞர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துதல், விவசாயம்/மீன்பிடியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, அங்குள்ள இளைஞர்களுக்கு புதிய சந்தைகளில் நிபுணத்துவம் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்’ பற்றியே பேசியிருப்பார் என, அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு கடந்த 15ஆம் திகதி செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தது. அதில், திகமாடுல்ல மாவட்ட நாடாளுமன்றமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, மேற்படி ‘அஷ்ரப் அருங்காட்சியகம்’ அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்பான செய்தி: கல்முனையில் அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ அமைக்க ஜனாதிபதி உத்தரவு: 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்