ரமழான் மாதத்தினையொட்டி, உலர் உணவு விநியோகம்

🕔 July 14, 2015
Ramadan food - 01
யு
த்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹுஸைனியா நகர் மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய கிராமங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு – ரமழான் மாதத்தினையொட்டி விசேட உலர் உணவுப் பொதிகள் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

சின்னப்பாலமுனை ‘சீட்ஸ்’ சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில், ‘இஸ்லாமிக் ரிலீஃப்’ நிறுவனத்தினால், இவ் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

‘சீட்ஸ்’ அமைப்பின் தலைவரும், பிரதி அதிபருமான பி. முஹாஜிரீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், ‘இஸ்லாமிக் ரிலீப்ஃ’ நிறுவனத்தின் வெளிக்கள மேற்பார்வை மதிப்பீட்டு உத்தியோகத்தர் எஸ்.எம். இப்றாஹிம், ரமழான் திட்டப் பொறப்பாளர் எம். ஹுஸைன், ‘சீட்ஸ்’ அமைப்பின்ஆலோசகர் எம்.எஸ்.எம். ஹனீபா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜித், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஹைதர் ஆகியோர் உட்பட ‘இஸ்லாமிக் ரிலீஃப்’ நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

100 குடும்பங்களைச் சேர்ந்த பயாளிகளுக்கு தலா 3 ஆயிரத்தி 500 ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, பால்மா, கருவாடு போன்ற உலருணவுகளைக் கொண்ட தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.Ramadan food - 04Ramadan food - 03Ramadan food - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்