தொழுகை, பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், களத்தில் இறங்கினார் ஹரீஸ்

🕔 July 13, 2015

Harees - 091

– ஹாசிப் யாஸீன் –

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, இன்று தனது ஆதரவாளர்களுடன் அம்பாறை கச்சேரிக்கு வருகை தந்திருந்தார்.

முன்னதாக, கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தொழுகையிலும், பிரார்த்தனைகளிலும் ஈடுபட்ட அவர் – பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள் மற்றும் ஊர் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான, சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்