தலைப்புச் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் ராணுவத் தளபதி: முக்கிய பொறுப்புக்கும் நியமனம்

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க – ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்து கொண்டார்.

இதனையடுத்து அவர் கட்சியின் படைவீரர்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ராணுவத் தளபதி இன்று (17) காலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து இந்த நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

மகேஷ் சேனநாயக்க – ராணுவத்தின் 22 வது தளபதியாக பணியாற்றினார். ஓய்வுக்குப் பின்னர் அவர் 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்.

அதே ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக மகேஷ் சேனநாயக்க அறிவித்தார்.