தலைப்புச் செய்திகள்

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

தினெட்டு (18) மாத சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக முன்முறையீடு செய்துள்ளமையினால், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்தமை மற்றும் இருவரைத் தாக்கிய வழக்கில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவர் தனது தண்டனை மற்றும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதன் பிறகு, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

பிணை நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, நீதிமன்றத்தின் – முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும் சமிந்த விஜேசிறிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.