
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் செலுத்த வேண்டிய 1,793,480 ரூபாய் நிலுவையிலுள்ள வீட்டு வாடகையை வசூலிக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நிலுவையில் உள்ள வாடகைத் தொகைகள் 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் செலுத்தப்பட வேண்டியுள்ளது எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக 2009 முதல் 2016 வரை ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்ட, கொழும்பு 05, கெப்பெட்டிபொல மாவத்தையில் உள்ள சம்மிட் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள 08 வீடுகளுக்கான வாடகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
2012 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சம்மிட் அடுக்குமாடி (Summit flats) குடியிருப்பிலுள்ள 22 வீடுகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவை வாடகை ரூ. 1,673,190 ஆகும்.
2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் ஜெயவதனகமவில் உள்ள 15 வீடுகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவை வாடகை ரூ. 8,449,265.
பொது நிர்வாக அமைச்சின் 2025 ஆண்டு செயல்திறன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு கணக்கறிக்கையில் இந்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.



