நான்கு வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்டத்தில் நிராகரிப்பு

🕔 July 13, 2015

Ampara - candi - 04
– யூ.எல்.எம். றியாஸ், எம்.சி. அன்சார் –

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அம்பாறை மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும், 20 சுயேட்சைக் குழுக்களும் வேட்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இவற்றில் 03 சுயேட்சைக் குழுக்களினதும், ‘ஒக்கம ரெசியோ ஒக்கம ரஜவரு’ எனும் கட்சியினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துசித பீ. வணிகசிங்க தெரிவித்தார்.

இன்று திங்கள் கிழமை, அம்பாறை மாவட்ட செயலகத்தில், ஐ.தே.கட்சி, ஐ.ம.சு.முன்னணி, அ.இ.மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன், முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தின் போட்டியிடுகின்றன. அந்தவகையில், ஐ.தே.க. சார்பில் வேட்புமனுவினை அக்கட்சியின் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளர் தயாகமகே தாக்கல் செய்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் முதன்மை வேட்பாளர் எம். அப்துல் மஜீத் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் அதன் முதன்மை வேட்பாளர் ஹென்றி மகேந்திரன் வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வேட்புமனுவினை, அதன் முதன்மை வேட்பாளர் வசந்த பியதிஸ்ஸ தாக்கல் செய்தார்.

இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் 04 லட்சத்து 65 ஆயிரத்து 757 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Ampara - candi - 02Ampara - candi - 01Ampara - candi - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்