அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் கையெழுத்திடவில்லை; தொடர்கிறது இழுபறி

🕔 July 12, 2015

Breaking news - 01ம்பாறை மாவட்டத்தில், ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள் – இதுவரை வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்களை மட்டுமே ஐ.தே.கட்சி சார்பாக நிறுத்துவதென மு.கா. தீர்மானித்துள்ளதாகவும், அது குறித்த இழுபறிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.

ஆயினும், மு.கா.வின் வேட்பாளர்கள் – ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது நிலைகொண்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் ஐ.தே.க.வின் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளதாக, அநேகமான ஊடகங்கள் – தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்