வேட்புமனுத் தாக்கலின் பின்னர் மு.கா. தலைவர்….
🕔 July 13, 2015
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – வேட்புமனுவினைத் தாக்கல் செய்ததன் பின்னர், கண்டி மீராம் மக்காம் பள்ளிவாசலுக்குச் சென்று, தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டதோடு, ஆதரவாளர்களையும் சந்தித்துப் பேசினார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மு.கா. தலைவர் ஹக்கீம், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடுகின்றார்.
இதன்போது, ஐ.தே.கட்சியின் மற்றுமொரு வேட்பாளரான – அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும் இணைந்து கொண்டார்.
கண்டி மாவட்டத்தில், ஐ.தே.கட்சி சார்பில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருவர் மட்டுமே முஸ்லிம்களாவர்.