மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி

🕔 July 14, 2015


னாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் President - 021தேர்தலிலும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாபதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்;

“ஐ.ம.சு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்  தலைவர்கள் அனைவரும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க வேண்டும் எனக் கூறினார்கள். அதுபோலவே, சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவினரில் தொண்னூற்றொன்பது சதவீதமானோர், மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்க வேண்டும் என்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், கட்சியை உடைத்துக் கொண்டு நான் வெளியே சென்றிருக்க வேண்டும். அல்லது கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவதற்கு என்னுடைய எதிர்ப்பினை நான் வெளிப்படுத்தினேன்.

ஆயினும் ஒரு விடயத்தினை நான் கூறினேன். அதாவது, கட்சியை பிளவுபட விடாமல், பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கிணங்க செயற்படுங்கள் எனக் கூறினேன். ஆயினும், மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கும் முடிவோடு என்னைத் தொடர்புபடுத்தாதீர்கள். இந்த முடிவுக்கு நான் இணங்க மாட்டேன் என்றேன்.

நாடாளுமன்றத்தினை ஏன் கலைத்தேன்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவது – அவர்களின் திட்டமாக இருந்தது.  அதன் பின்னர், ஐ.ம.சு.முன்னணியிலுள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை ராஜிநாமா செய்ய வைத்து, அந்த இடத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். இதன் மூலம் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு அவர்கள் தயாரானார்கள்.

இதனால்தான் நாடாளுமன்றத்தினை நான் கலைத்தேன். கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் திகதி பெற்றுக் கொண்ட வெற்றியினை உறுதிப்படுத்துவதற்காகத்தான், சகல முயற்சிகளையும் நான் மேற்கொண்டேன்” என்றார்.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தான் நடுநிலை வகிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி சிறிசேன கூறினார்.

மேலும், ஐ.ம.சு.கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால், அதிலுள்ள சிரேஷ்டமான ஒருவரை, பிரதம மந்திரியாக நியமிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments