ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை 0

🕔31.Jul 2015

– பி. முஹாஜிரீன் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கு, நேற்று வியாழக்கிழமை –  திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட பொதுச் சுகாதார அதிகாரிகள், அங்கு பரிசோதனை நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டனர். அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில், சிரேஷ்ட சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எம். ஜௌபர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு விஜயம் செய்து,

மேலும்...
பாலமுனை பள்ளிவாசலுக்கு, ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு

பாலமுனை பள்ளிவாசலுக்கு, ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு 0

🕔31.Jul 2015

– பி. முஹாஜிரீன் – பாலமுனை ‘தானா அல் புஸைரி’ ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு, அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பு, ஒலி பெருக்கி சாதனங்ளை அன்பளிப்புச் செய்துள்ளது. மேற்படி ஒலி பெருக்கி சாதனங்களைக் கையளிக்கும் வைபவம், நேற்று வியாழக்கிழமை ‘தானா அல் புஸைரி’ ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது. பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ். லாஹீர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அல்

மேலும்...
தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு 0

🕔30.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமையினாலேயே, தனது பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்ததாக, இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஐ.தே.கட்சி சார்பாக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு ஆதரவாகவும், அதே மாவட்டத்தல் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள்

மேலும்...
ஊடகத்துறை பிரதியமைச்சர் ராஜிநாமா செய்யப் போவதாக அறிவிப்பு

ஊடகத்துறை பிரதியமைச்சர் ராஜிநாமா செய்யப் போவதாக அறிவிப்பு 0

🕔30.Jul 2015

ஊடகத்துறை பிரதியமைச்சர் சாந்த பண்டார, தனது பதவியியை ராஜிநாமா செய்யவுள்ளதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார். குருணாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவினை, ஊடகத்துறை பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔29.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால நீதிமன்றத் தடை, ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி இடைக்காலத் தடை நீடிப்பினை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று புதன்கிழமை வழங்கியது. சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுவினை, அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி  கூட்டுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி, பிரசன்ன சோலங்கராச்சி

மேலும்...
பயணப் பைக்குள் சடலம் கண்டெடுப்பு

பயணப் பைக்குள் சடலம் கண்டெடுப்பு 0

🕔29.Jul 2015

பயணப் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலமொன்றினை, புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அனுராதபுரம் செல்லும் பஸ்களுக்காக, பயணிகள் காத்திருக்குமிடத்தில், இந்தப் பயணப் பை வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
இலுக்குச்சேனை மக்களின் முப்பது வருட குடிநீர் பிரச்சினைக்கு, அமைச்சர் ஹக்கீம் தீர்வு

இலுக்குச்சேனை மக்களின் முப்பது வருட குடிநீர் பிரச்சினைக்கு, அமைச்சர் ஹக்கீம் தீர்வு 0

🕔28.Jul 2015

அக்கரைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட இலுக்குச்சேனை பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் நலன் கருதி,  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று திங்கள்கிழமை, பாவனையாளர்களிடம் கையளித்தார். இந்தப் பிரதேசத்தில் வாழும்

மேலும்...
மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான்

மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான் 0

🕔28.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – மதுக் கடை இயங்குகின்ற கட்டிடம் ஒன்றின் மேல் பகுதியில், முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் சர்வதேச பாடசாலையொன்று நடத்தப்பட்டு வரும் அதிர்ச்சிகரமான தகவலொன்றினை, மேல் மாகாணசபை உறுப்பினரும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிடுகின்றவருமான முஜிபுர் ரஹ்மான் வெளிப்படுத்தினார். முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து, நேற்று திங்கட்கிழமையிரவு  வெள்ளவத்தை மெரைன் ரைவ்

மேலும்...
எம்.பி. காய்ச்சல்

எம்.பி. காய்ச்சல் 0

🕔28.Jul 2015

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான காய்ச்சல் வருகின்றமை பற்றி நாம் அறிவோம். மலேரியா காய்ச்சல் ஒரு காலத்தில் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சிக்கன்குனியா எனும் காய்ச்சலொன்று வந்து, சனங்களை ‘அடித்து முறித்து’ப் போட்டது. இப்போது, டெங்குக் காய்ச்சல் சீசன். அரசியலிலும் சில வகையான காய்ச்சல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில

மேலும்...
மைத்திரியின் விசுவாசிகள், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்

மைத்திரியின் விசுவாசிகள், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம் 0

🕔28.Jul 2015

அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.டி.எஸ். குணவர்தண, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி. நாவின்ன மற்றும் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோர் – ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அங்கத்துவத்திலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே, மேற்படி ஐவரையும், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கும் முடிவினை மேற்கொண்டதாக, ஜனாதிபதியின்

மேலும்...
சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔28.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் சிறந்த ஆட்சியினை ஏற்படுத்தும் வகையில், ஐ.தே.கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில்விக்கிரமசிங்கவுக்கும், மாதுலுவாவே சோபித்த தேரவுக்குமிடையில், இன்று செவ்வாய்கிழமை ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. எதிா்வரும் நாடாளுமன்றத் தோ்தலின் பின்னர், சிறந்த ஆட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கைச்சாத்திடும் நிகழ்வு, இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது

மேலும்...
தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது 0

🕔28.Jul 2015

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக, இன்று செவ்வாய்கிழமை வரை, 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகிறது. கடந்த 17 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்த நிலையில், அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 40 பேர்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் ‘மயில்’ போட்டியிடுவது, மஹிந்தவுக்கு ஆதரவாகவே அமையும்; மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் ‘மயில்’ போட்டியிடுவது, மஹிந்தவுக்கு ஆதரவாகவே அமையும்; மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔28.Jul 2015

(முன்ஸிப்) அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்பது – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், ஐ.ம.சு.முன்னணியை வெற்றிபெறச் செய்வதற்கு உதவியாகவும் அமையுமென்று மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, ஐ.தேசியக் கட்சியை மு.காங்கிரசிடம் தங்கியிருக்க வைப்பதென்பது பிரதானமான விடயமாகும் என்றும், எனவேதான், அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தினை,

மேலும்...
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு 0

🕔28.Jul 2015

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது) நேற்றிரவு, மாரடைப்புக் காரணமாக காலமானார். இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார். அப்துல் கலாமின் மறைவினையடுத்து, இந்தியாவிலுள்ள  பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் இந்திய ஜனாதிபதியின் மறைவினையடுத்து, 07

மேலும்...
மு.கா. தலைவரின் உரைகள் அடங்கிய நூல், ஓகஸ்ட் மாதம் வெளியீடு

மு.கா. தலைவரின் உரைகள் அடங்கிய நூல், ஓகஸ்ட் மாதம் வெளியீடு 0

🕔27.Jul 2015

மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூலொன்றின்றினை, ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்தார். ‘இலங்கை இந்திய சமூக அபிவிருத்திப் பணியில், முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில், ஓ.எல்.எம். ஆரிப் எழுதிய நூலின் வெளியிட்டு விழா, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

மேலும்...