தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

🕔 July 30, 2015

Chairman - Rupavahini - 01– அஸ்ரப் ஏ. சமத் –

.தே.கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமையினாலேயே, தனது பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்ததாக, இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஐ.தே.கட்சி சார்பாக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு ஆதரவாகவும், அதே மாவட்டத்தல் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்க எதிராகவும் தேர்தல் பிரசாரத்தில், தான் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாரேஹேன்பிட்டியிலுள்ள ஜனாகி ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவா் அங்கு தொடா்ந்து பேசுகையில் கூறுகையில்;

“கடந்த ஜனவரி 08 ஆம் திகதி, இந்த நாட்டில் நல்லதொரு நல்லாட்சியை ஏற்படுத்த நாம் அணைவரும் பாடுபட்டோம். ஆனால், ஹம்பாந்தோட்டையில் இருந்து குருணாகலுக்கு வந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத் தோ்தலில் குதித்துள்ளார்.

எனது ஊர் குருணாகல் தம்பெதெனியால. மக்கள் நிரகாரித்த முன்னள் ஜனாதிபதி, மீண்டும் இந்த நாட்டில் கொலை,களவு, குடும்ப ஆட்சி மற்றும் அரச சொத்துக்கள் அபகரிப்பு போன்றவற்றில் சம்பந்தப்பட்டவா்களை சோ்த்துக் கொண்டு, மீளவும் ஆட்சிக் கதிரையைப் பிடிக்கக் களம் இறங்கியுள்ளார்.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பபட்டவரை, இந்த நாட்டு மக்களும், தற்போதைய ஜனாதிபதியும் பிரதமர் பதவிக்குத் தெரிபு செய்ய மாட்டார்கள்.
இருந்தபோதும், இவா்கள் அரசாங்கத்தில் இருந்து கொண்டு சம்பாதித்த பணத்தினை செலவு செய்து, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாமென முயற்சிக்கின்றனர்.

ஆகவேதான், குருணாகல் மாவட்டத்தில் ஜ,தே.கட்சிக்காக தோ்தல் பிரச்சாரங்களில் நான் ஈடுபடவுள்ளேன். எனவே, அரச தொலைக்காட்சி ஒன்றின் தலைவராக இருந்து கொண்டு, என்னால் அரசியலில் ஈடுபட முடியாது. எனவேதான், எனது தனிப்பட்ட விடயங்களுக்காக இப் பதவியிலிருந்து விலகுவாதாக ஜனாதிபதி, பிரதமா் மற்றம் ஊடக அமைச்சருக்கு அறிவித்துள்ளேன். ரூபவாஹினியின் தலைவராக நான் பதவி வகித்த காலத்தில் எனது அமைச்சரோ, பிரதமரோ, ஜனாதிபதியோ எங்களுக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.

ஆனால், கடந்த காலத்தில் – முன்னாள் ஜனாதிபதியின் பிரச்சாரத்தின் பொருட்டு, ரூபவாஹினிக்கு 260 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்கள்.  இதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ, அல்லது இந் நிதியை மீள அறிவிடுவதற்கோ எவ்வித ஆவணங்களும் இல்லை. தமது விளம்பரங்களை ஒளிபரப்புமாறு இவர்கள் தொலைபேசி மூலமாகவே உத்தரவிட்டுள்ளனர்.

தற்போதைய ஆட்சியில் எவ்வித விளம்பரங்களையோ அல்லது இலவசமான ஒளிபரப்புகளையோ மேற்கொள்ளுமாறு, அரசாங்க அமைச்சா்களிடமிருந்து எவ்வித அழுத்தங்களும் வழங்கப்படுவதில்லை.

ரணில் விக்கிரமசிங்க, மீளவம் பிரதமராக வந்தால்,  இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் பதியை பெறுவதா என்று நான் பின்னா் தீர்மானிப்பேன்” என்றார்.Chairman - Rupavahini - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்