சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு

🕔 July 29, 2015

Courts order - 01ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால நீதிமன்றத் தடை, ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இடைக்காலத் தடை நீடிப்பினை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று புதன்கிழமை வழங்கியது.

சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுவினை, அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி  கூட்டுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி, பிரசன்ன சோலங்கராச்சி மனுவொன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவின் அடிப்படையில், சு.கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த 15 ஆம் திகதி இடைக்காலத் தடை விதித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்