மைத்திரியின் விசுவாசிகள், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்

🕔 July 28, 2015

SLFP - 01மைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.டி.எஸ். குணவர்தண, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி. நாவின்ன மற்றும் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோர் – ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அங்கத்துவத்திலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே, மேற்படி ஐவரையும், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கும் முடிவினை மேற்கொண்டதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் இவர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஐ.தே.முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக இவர்கள் செயற்பட்டமை குறிப்பிடத்தது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான சந்தர்பம் வழங்கப்பட்டமைக்கு, மேற்படி ஐவரும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் ஐ.ம.சு.முன்னணி சார்பாக, தாங்கள் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள இவர்கள், ஐ.தே.முன்னணியில் களமிறங்கியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்