இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

🕔 July 28, 2015

Abdul kalam - 01ந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது) நேற்றிரவு, மாரடைப்புக் காரணமாக காலமானார்.

இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

அப்துல் கலாமின் மறைவினையடுத்து, இந்தியாவிலுள்ள  பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் இந்திய ஜனாதிபதியின் மறைவினையடுத்து, 07 நாட்கள் அங்கு துக்கம் அனுஷ்டிக்கப்படும் என, அந் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் 11ஆவது ஜனாதிபதியாக, 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, அப்துல் கலாம் பதவி வகித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி அப்துல் கலாம் பிறந்தார்.

பொக்ரான் அணு ஆயுத சோதனையில், 1998 ஆம் ஆண்டு  – அப்துல் கலாம் முக்கிய பங்கு வகித்தார். இதேவேளை, இந்தியாவின் ‘ஏவுகணை மனிதர்’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

இந்திய நாட்டின் உயர் விருதுகளான பத்ம பூஷண், பாரத ரத்னா ஆகியவற்றினைப் பெற்றுள்ள அப்துல் கலாம், தமிழகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இந்திய ஜனாதிபதியாவார்.

சைனுலாப்தீன் – ஆசியா உம்மா ஆகியோரின் புதல்வரான அப்துல் கலாமின் இளவயது வாழ்க்கை, மிகவும் வறுமையான நிலையிலேயே கழிந்தது.

பாடசாலைக் கல்வியை முடித்த கையோடு, பத்திரிகைகளை விற்கும் தொழிலினைச் செய்து வந்தார்.

ஆயினும், கல்வியில் மிகப் பெரும் அடைவுகளைக் கண்ட அப்துல் கலாம், இந்திய நாட்டின் ஏவுகணை விஞ்ஞானிகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்