அமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது

🕔 July 13, 2015
ACMC logoRishad - 032– அஷ்ரப் ஏ. சமத் –

மைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது, முதன் முறையாக, அம்பாறை மாவட்டத்தில் தனது ‘மயில்’ சின்னத்தில் தேர்தலொன்றில்  போட்டியிடுகின்றது. 

இந்த நிலையில், அ.இ.ம.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் – வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில், முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதற்கிணங்க, அவரின் தலைமையில்,  09  பேர் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

மேற்படி பட்டியலில் – அமைச்சர் றிசாத்துடன், அ.இ.ம.காங்கிரசின் மூத்த உறுப்பினர் டபள்யு. என். எஹியாக்கான், சிங்கள வேட்பாளர்கள் இருவர் மற்றும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த 05 பேர் என, மொத்தம் 09 பேர் போட்டியிடுகின்றனா்.

இதேவேளை, அ.இ.மக்கள் காங்கிரஸ் சார்பாக, புத்தளம் மாவட்டத்தில் ஜ. தே.கட்சியின் யானைச் சின்னத்தில் முன்னாள் மாகண அமைச்சா் எம்.எச்.எம். நவவி போட்டியிடுகின்றார்.  அநுராதபும் மாவட்டத்தில்,  பிரபல சமுக சேவையாளரும் வா்த்தகருமான  இஷாக் களமிறங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், அ.இ.ம.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பளாளராக பிரதியமைச்சா் எம். எஸ்.எஸ். அமீா் அலி போட்டியிடுகின்றார். இவருடன் மேலும் சிலரும் அ.இ.ம.காங்கிரசில் களமிறங்கியுள்ளனா்.

இதேவேளை –  திருமலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் அ.இ.ம.காங்கிரஸ் தனது வேட்பாளர்களை ஜ.தே.கட்சியில் களமிறக்கியுள்ளது.

இந்த நிலையில், அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது –   அம்மாறை மாவட்டத்தில் முதல் தடவையாக தனது மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது. ஏற்கனவே, அ.இ.ம.காங்கிரஸ் கட்சி, வெற்றிலைச் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அம்பாறை மாவட்டத்தில், அ.இ.ம.காங்கிரசின் முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான  பொத்துவில்  மஜீத்  களம் இறங்கியுள்ளாா். இவரின் தலைமையில் –  கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயா் சிறாஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தா் கலாநிதி எம்.எம். இஸ்மாயில், கணனி பொறியியலாளா் அன்வா் முஸ்தபா, தொழிலதிபா்   என்.எம். நபீல்,  தொழிலதிபா் நதீா் உட்பட 11 பேர் தோ்தலில் குதிக்கின்றனா்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்