மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை

🕔 July 12, 2015
MOU - 01
– அஸ்ரப்  ஏ. சமத் –

.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் – அமைச்சர் ராஜித சேனாரத்ன, மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர், இன்று காலை – அலரி மாளிகையில் வைத்து, இரு வெவ்வேறு எழுத்துமூல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஐ.ம.சு.முன்னணியிலிருந்து பிரிந்து வந்துள்ள, அமைச்சர் ராஜத குழுவினரும், சிஹல உறுமய கட்சினரும், ஐ.தே.கட்சியினருடன் இணைந்து – நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணி எனும் அமைப்பினை உருவாக்கி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் – யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பில் – ஐ.தே.கட்சியுடன், அமைச்சர் ராஜித குழுவினரும், சிஹல உறுமய கட்சியினரும் செய்து கொண்ட உடன்படிக்கைகளை எழுத்து மூலம் ஆவணப்படுத்தும் நோக்கிலேயே, இந்த ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

முதலில், சிஹல உறுமய கட்சித் தலைவர் அத்துரலிய ரத்ன தேரா் மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதனையடுத்து, அமைச்ராஜித்த மற்றும் ரணில் விக்கிரமிசிங்கவுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து வந்த – அர்ஜன ரணதுங்க, எம்.ரி.எஸ். குணவா்த்தன, குணசேகர மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர  ஆகியோரைக் கொண்ட குழுவுக்கு அமைச்சர் ராஜித தலைமை தாங்கி, மேற்படி ஒப்பந்தத்தினை மேற்கொண்டார்.

ஐ.ம.சு.முன்னணியிலிருந்து, தான் உட்பட 13 பேர்  ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட வருவர் என்று,  நேற்றைய தினம் அமைச்சர் ராஜித கூறியிருந்த நிலையில், இன்று 07 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். இந்த  07 பேரும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனா்.

மேற்படி ஒப்பந்தத்தில், சாட்சிகளாக –  ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவா் ரஊப் ஹக்கீம், மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கையெழுத்திட்டனா்.

ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னர், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு உரையாற்றுகையில்;  “இவ்வாறான கட்சிகள் சோ்ந்துதான் ஜனவரி 08 ஆம் திகதி,  இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைக் கொண்டுவந்தோம். அதேபோன்று, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர்,  நல்லாட்சியொன்றினை நாடாளுமன்றத்திலும் ஏற்படுத்துவோம்” என்றார்.

மேலும், “ராஜபக்ஷ திருடர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனா்.  அந்த திருடர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

அமைச்சர்கள் ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ரஊப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோரும் இங்கு உரையாற்றினாா்கள்.MOU - 02MOU - 04MOU - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்