மு.கா. தலைமையின் அதிரடி முடிவு; அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்கள்; நள்ளிரவு தாண்டி கையொப்பமிட்டனர்

🕔 July 13, 2015

SLMC - 034– முன்ஸிப் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அபேட்சகர்கள், மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர், ஐ.தே.கட்சியின் வேட்புமனுவில் – நேற்று நள்ளிரவு தாண்டிய நிலையில் சிறிகொத்தவில் வைத்து கையொப்பமிட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ. எம். மன்சூர் ஆகியோர் – குறித்த வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் இவர்கள் மூவரும், ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் வைத்து கையொப்பமிட்டதாக அறிய முடிகிறது.

ஏற்கனவே, அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பாக ஐ.தே.கட்சியில் 05 பேர் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. பின்னர், 04 பேர் போட்டியிடுவர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில், தற்போது கையொப்பமிட்டுள்ள மூவருடன் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவமும் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆயினும், இறுதி நேரத்தில் அம்பாறை மாவட்டத்தில் மு.கா. சார்பாக 03 பேர் மட்டுமே ஐ.தே.கட்சியில் போட்டிடுவார்கள் என்று – மு.காங்கிரசின் தலைவர் அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இவ் விவகாரம் தொடர்பில் – நேற்று நள்ளிரவு வரை, பாரிய இழுபறி நிலை காணப்பட்டது.

மு.கா. சார்பில் மூவரைக் களமிறக்கினால், குறித்த மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுகின்றமையினால், இதனை ஏற்றுக் கொள்வதற்கு ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே – அதிகம் எதிர்ப்பினை வெளிக்காட்டியதாக அறிய முடிகிறது.

ஆயினும், நள்ளிரவு 12.10 மணியளவில் – அனைத்து இழுபறிகளுக்கும் முடிவு காணப்பட்டு, மு.காங்கிரசின் மேற்படி மூன்று நபர்களும், வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்