அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம்

🕔 July 14, 2015

Hakeem - kandy - 02ள்ளிவாசல்கள்,  ஆலயங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கும்  தீவிரவாதக் குழுக்களுக்கு உந்துதலை வழங்குவதோடு, அக்குழுக்களுக்கு – அரச அனுசரணையினைப் பெற்றுக் கொடுத்த யுகம் மாறிவிட்டது என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சரும்,  கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி வேட்பாளருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான – ஐ.தே.கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – இன்று செவ்வாய்கிழமை கண்டியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“மக்களின் சுதந்திரத்தையும், ஊடக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் புதிய அரசியல் கலாசாரம் முன்னேற்றமடைந்துள்ளது.

பள்ளிவாசல்கள்,  ஆலயங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கும்  தீவிரவாதக் குழுக்களுக்கு உந்துதலை வழங்குவதோடு, அக்குழுக்களுக்கு, அரச அனுசரணையினைப் பெற்றுக் கொடுத்த யுகம் மாறிவிட்டது.

எமது அரசாங்கத்தில் – பள்ளிவாசல்கள், கோயில்கள் மற்றும் ஆலயங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுத்தப்படும். நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்.

இவ்வாறான எமது அரசாங்கத்துக்கு ஜனாதிபதியின் ஆதரவு அவசியமாகும். ஜனவரி 08 ஆம் திகதி மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையினை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்வரும் எமது அரசாங்கத்துக்கான ஆதரவினை, ஜனாதிபதி வழங்குவார் என்கிற நம்பிக்கை எமக்கு உண்டு” என்றார்.Hakeem - kandy - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்