Back to homepage

வெளிநாடு

மொராக்கோ நிலநடுக்கம்; குடும்பத்தில் 10 பேரை இழந்த ஹவுடா அவுட்சாஃப்: மொத்த உயிரிழப்பு 02 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்

மொராக்கோ நிலநடுக்கம்; குடும்பத்தில் 10 பேரை இழந்த ஹவுடா அவுட்சாஃப்: மொத்த உயிரிழப்பு 02 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் 0

🕔10.Sep 2023

மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக ஹவுடா அவுட்சாஃப் என்பவர் தனது குடும்பத்தில் 10 பேரை இழந்து துயரத்தில் தவித்து வருகின்றார். “என் குடும்பத்தினரில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் அவர்களுடன் இருந்தேன். இப்போது அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை நம்ப முடியவில்லை” என அவர் பிபிசியிடம் வேதனையுடன் கூறியுள்ளார். வட ஆபிரிக்க நாடுகளில்

மேலும்...
மொராக்கோ நிலநடுக்கம்: 1037 பேர் பலி, 1200 பேர் காயம் (update)

மொராக்கோ நிலநடுக்கம்: 1037 பேர் பலி, 1200 பேர் காயம் (update) 0

🕔9.Sep 2023

மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1,037 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200 பேர் காயமடைந்துள்ளனர். முன்னர் 632 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில்

மேலும்...
நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம்

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம் 0

🕔8.Sep 2023

தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று (08) காலமானார். அவருக்கு 57 வயதாகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர். அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். நடிகராகவும் இயக்குநராகவும் ஆவதற்கு முன்பு, ராஜ்கிரண், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

மேலும்...
இலங்கையர் அபுதாபி அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் 176 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை வென்றார்

இலங்கையர் அபுதாபி அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் 176 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை வென்றார் 0

🕔6.Sep 2023

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் – அபுதாபி சீட்டிழுப்பில் (Series 255 Big Ticket Live draw) 20 மில்லியன் திர்ஹம் (இலங்கை மதிப்பில் 176 கோடி ரூபாவுக்கும் அதிகம்) பரிசை வென்றுள்ளார். துரைலிங்கம் பிரபாகர் என்பவருக்கு இந்த வெற்றித் தொகை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துரைலிங்கம் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு

மேலும்...
வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல்

வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல் 0

🕔5.Sep 2023

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு எதிரான போரில், ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் – பியோங்யாங்கில் இருந்து

மேலும்...
மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து; 52 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம்

மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து; 52 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம் 0

🕔31.Aug 2023

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் இன்று (31) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 43 பேர் காயமடைந்ததாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதேவேளை பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு படையயினர் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்,

மேலும்...
இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு 0

🕔29.Aug 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதோடு, அவுரகு்க பிணையிணையும் வழங்கியுள்ளது. எதிர்வரும் தேசிய தேர்தலுக்கு முன்னர்- சவால்களை எதிர்கொண்டிருக்கும் இம்ரான்கானுக்கு மேல் நீதிமன்றின் இந்த முடிவு பெரும் ஆறுதலாக இருக்கும். அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு

மேலும்...
பிரான்ஸ் பாடசாலைகளில் ‘ஹிஜாப்’ அணிய தடை

பிரான்ஸ் பாடசாலைகளில் ‘ஹிஜாப்’ அணிய தடை 0

🕔28.Aug 2023

பிரான்ஸ் நாட்டு அரச பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனப்படும், தளர்வான – முழு நீள ஆடைகளை அணிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்படும் என அந்த நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் திகதி புதிய கல்வியாண்டு தொடங்கும் போது, இந்த விதி அமுலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரான்ஸ் அரச

மேலும்...
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா 0

🕔23.Aug 2023

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் சற்று முன்னர் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. சந்திரயான் 3 திட்டத்துக்கு இந்திய மதிப்பில் 615 கோடி செலவானது. இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் ரூ.386

மேலும்...
17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது

17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது 0

🕔22.Aug 2023

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, 17 வருடங்களாக நாடு கடந்து வாழ்ந்த பின்னர் – தாயகம் திரும்பிய நிலையில் – அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து தனியார் விமானம் ஒன்றினூடாக – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இவர் தாய்லாந்து திரும்பியிருந்தார். இதனையடுத்து

மேலும்...
இலங்கைக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்தியா அனுமதி

இலங்கைக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்தியா அனுமதி 0

🕔20.Aug 2023

இலங்கைக்கு பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள கெவாடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதற்காக நாகை துறைமுகம் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே

மேலும்...
உலகில் நீளமான தாடியைக் கொண்டவர்: அமெரிக்கப் பெண் கின்னஸ் சாதனை

உலகில் நீளமான தாடியைக் கொண்டவர்: அமெரிக்கப் பெண் கின்னஸ் சாதனை 0

🕔14.Aug 2023

உலகில் நீளமான தாடியைக் கொண்ட பெண் எனும் கின்னஸ் சாதனையை அமெரிக்கப் பெண் ஒருவர் ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த 38 வயதுடைய எரின் ஹனிகட் (Erin Honeycutt) என்பவர், இரண்டு வருடங்களாக தாடியை வளர்த்து – இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார். அவருடைய தாடி இப்போது 30 செமீ (11.81 அங்குலம்) நீளத்தைக் கொண்டுள்ளது. அந்த

மேலும்...
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உல்-ஹக் கக்கார் தெரிவு

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உல்-ஹக் கக்கார் தெரிவு 0

🕔13.Aug 2023

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பலூசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்த அன்வர் உல்-ஹக் கக்கார் (Anwar ul-Haq Kakar) நேற்று நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அன்வாருல் ஹக் கக்கர் மார்ச் 2018 முதல் பாகிஸ்தானின் செனட் உறுப்பினராக உள்ளார். பாகிஸ்தானின் 15 ஆவது நாடாளுமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பமானது. இந்த

மேலும்...
இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Aug 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்திற்காக பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. “இம்ரான் கான் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி ஹுமாயுன் திலாவர் அறிவித்தார்” என பாகிஸ்தான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இம்ரான் கான் நீதிமன்றத்தில்

மேலும்...
பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம்

பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம் 0

🕔30.Jul 2023

பாகிஸ்தானில் அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இன்று (30) நடந்த குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜம்மியத் – உலமா – இ – இஸ்லாம் – ஃபாஸ்ல் (JUIF) என்ற கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜாமியத்-உலமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்