பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உல்-ஹக் கக்கார் தெரிவு

🕔 August 13, 2023

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பலூசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்த அன்வர் உல்-ஹக் கக்கார் (Anwar ul-Haq Kakar) நேற்று நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அன்வாருல் ஹக் கக்கர் மார்ச் 2018 முதல் பாகிஸ்தானின் செனட் உறுப்பினராக உள்ளார்.

பாகிஸ்தானின் 15 ஆவது நாடாளுமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த நிலையில் அதன் ஆயுட் காலம் நிறைவடைவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே நாடாளுமன்றம் கடந்த புதன்கிழமை கலைக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுத் தேர்தலை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தல் நடைபெறும் வரையில் இடைக் காலப் பிரதமராக ஒருவரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அதன்படி பலூசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உப்பினர் அன்வார் உல்-ஹக் கக்காரின் பெயரை முன்னாள் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃபும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் நேற்று பரிந்துரைத்தனர்.

இதற்கு ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி உடனடியாக அனுமதி அளித்ததையடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வார் – உல்-ஹக் பதவியேற்கவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்