இலங்கையர் அபுதாபி அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் 176 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை வென்றார்

🕔 September 6, 2023

லங்கையைச் சேர்ந்த ஒருவர் – அபுதாபி சீட்டிழுப்பில் (Series 255 Big Ticket Live draw) 20 மில்லியன் திர்ஹம் (இலங்கை மதிப்பில் 176 கோடி ரூபாவுக்கும் அதிகம்) பரிசை வென்றுள்ளார்.

துரைலிங்கம் பிரபாகர் என்பவருக்கு இந்த வெற்றித் தொகை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துரைலிங்கம் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்தார், தற்போது துபாயில் உள்ள நிறுவனமொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றுகின்றார்.

கடந்த ஓகஸ்ட் கடைசி வாரத்தில் – அவர் வெற்றிபெறும் டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கினார்.

துரைலிங்கம் பிரபாகர் கடந்த ஐந்து வருடங்களாக தனது நண்பர்கள் 10 பேர் கொண்ட குழுவுடன் குறித்த அதிஷ்ட லாபச் சீட்டினை கடந்த ஐந்து வருடங்களாக வாங்கி வந்துள்ளார். தொடர்ந்தும் வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

“இந்த வெற்றி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவில்லை, நான் நினைக்கிறேன். இந்த வெற்றி வாழ்க்கையை மாற்றும்” என்று துரைசிங்கம் பிரபாகரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

Comments