இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

🕔 August 5, 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்திற்காக பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

“இம்ரான் கான் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி ஹுமாயுன் திலாவர் அறிவித்தார்” என பாகிஸ்தான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை, ஆனால் அவர் லாகூரில் கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தண்டனை பெற்றால் நொவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற வேண்டிய தேசிய தேர்தல்களில் இம்ரான் கான் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்