இலங்கைக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்தியா அனுமதி

🕔 August 20, 2023

லங்கைக்கு பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள கெவாடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதற்காக நாகை துறைமுகம் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்