உலகில் நீளமான தாடியைக் கொண்டவர்: அமெரிக்கப் பெண் கின்னஸ் சாதனை

🕔 August 14, 2023

லகில் நீளமான தாடியைக் கொண்ட பெண் எனும் கின்னஸ் சாதனையை அமெரிக்கப் பெண் ஒருவர் ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த 38 வயதுடைய எரின் ஹனிகட் (Erin Honeycutt) என்பவர், இரண்டு வருடங்களாக தாடியை வளர்த்து – இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.

அவருடைய தாடி இப்போது 30 செமீ (11.81 அங்குலம்) நீளத்தைக் கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது உலகில் வாழும் பெண்களில் மிக நீளமான தாடியை உடைய பெண் எனும் உலக சாதனையை அதிகாரப்பூர்வமாக அவர் ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் அமெரிக்காவைச் சேர்ந்த 75 வயதான விவியன் வீலர் என்பவர் 25.5 செ.மீ (10.04 அங்குலம்) நீளமுடைய தாடியை வளர்த்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.

எரினுக்கு 13 வயதில் முகத்தில் முடி வளர ஆரம்பித்தது. அதனை அகற்ற ஷேவிங், வக்சிங் மற்றும் பல்வேறு முறைகளை அவர் பயன்படுத்தினார், இருப்பினும் முடி வளர்ந்து கொண்டே இருந்தது.

தா ன் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை ஷேவிங் செய்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

2018 ஆம் ஆண்டில், எரினின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவரின் வலது கால் முழுமையாக அகற்றப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்