Back to homepage

பிரதான செய்திகள்

அதாஉல்லாவின் கட்சி அமைப்பாளர் மன்சூர், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரானார்

அதாஉல்லாவின் கட்சி அமைப்பாளர் மன்சூர், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரானார் 0

🕔12.Aug 2016

 – கே.ஏ. ஹமீட் – இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், பொறியியலாளருமான எஸ்.ஐ.   மன்சூர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க

கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க 0

🕔12.Aug 2016

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை, பகிரங்கமாக கிழித்து வீசிய நபர்கள் எவருக்கும், சுதந்திரக் கட்சினூடாக குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று, அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஊடகமொன்று பதிலளித்தபோதே, அவர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது

மேலும்...
புதையல் தோண்டியவர்கள் கைது

புதையல் தோண்டியவர்கள் கைது 0

🕔12.Aug 2016

– க. கிஷாந்தன் – வெலிமடை மிரஹாவத்த வேகொட பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஐவரை பண்டாரவளை பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர். பண்டாரவளை பொலிஸ் விசேட குற்றப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் – சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். கற்குவாரியொன்றினை நடாத்தி செல்லும்

மேலும்...
ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை

ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை 0

🕔11.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அடுத்தவற்றின் மீது ஆர்வம் கொள்வது மனித மனதின் இயல்பாகும். இந்த ஆர்வக் கோளாறினால், நமக்கு வெளியிலுள்ளவற்றினையே எப்போதும் நாம் வியப்போடு பார்க்கிறோம். காலப்போக்கில், நம்மிடமிருப்பவற்றை நாம் புறக்கணித்து விடத் தொடங்குகின்றோம். பின்னொரு காலத்தில், நம்மிடமுள்ளவற்றின் பெருமைகள் குறித்து, அடுத்தவர் பேசும்போதுதான், அவற்றினை நாம் திரும்பிப் பார்க்கத் தொடங்குகின்றோம். தம்பெருமை

மேலும்...
முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில்

முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில் 0

🕔11.Aug 2016

– அஸ்ரப் ஏ சமத் – இலங்கையில் யுத்த காலத்தின்போது, முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் அன்னியோன்யமாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து ஓர் இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தியிருந்தனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் ஆரம்ப வைபவம் இன்று வியாழக்கிழமை, கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு

மேலும்...
பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு

பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Aug 2016

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே, அவரை எதிர்வரும் 24 ஆம்

மேலும்...
ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி

ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி 0

🕔11.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிறாடு செல்வதற்கு விதித்திருந்த தடையினை கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய, இன்று வியாழக்கிழமை நீக்கி உத்தரவிட்டார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கடந்த ஐந்தாண்டுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பெற்ற கடன்கள் தொடர்பான தகவல்களை, நீதிமன்றில் வெளியிடத் தவறியமை காரணமாக, அவர் வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனது மனைவிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், தன்னை

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔11.Aug 2016

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை சற்று முன்னர் ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றுக்கு கறுப்புப் பட்டியணிந்து வந்து எதிர்ப்பு வௌியிட்டதையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது பற்றிய சட்டமூலம், இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கபட்ட நிலையில், ஒன்றிணைந்த எதிரணியினர் இவ்வாறு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தை சபாநாயகர் ஒத்தி வைத்ததோடு, கட்சித் தலைவர்களின்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக, உதுமாலெப்பை நியமனம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக, உதுமாலெப்பை நியமனம் 0

🕔11.Aug 2016

– கே.ஏ. ஹமீட் –அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவராக, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை ஜனாதிபதியினால் நேற்று புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரர்களாக, ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அமைச்சர் தயா கமே, ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக

மேலும்...
அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை

அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை 0

🕔11.Aug 2016

– றிசாத் ஏ காதர் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பிரதேசம் இலங்கையில் மட்டுமன்றி, உலகளவிலும் உச்சரிக்கப்படுகின்ற ஓர் இடமாகும். அறுகம்பே என்பது, உல்லாசப் பயணத்துறைக்கு பெயர்போன இடமாக இருப்பினும், இங்கு வாழ்கின்ற மக்கள் இன்னும் தமது பாரம்பரிய தொழிலான கடற்றொழிலை தொடர்ந்தும் செய்து வருகின்றனர். சுமார் 150 வருடங்களாக இங்கு மீன்பிடியில்

மேலும்...
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை; மதில் விழுந்து மரணம்

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை; மதில் விழுந்து மரணம் 0

🕔11.Aug 2016

– க. கிஷாந்தன் – வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மதில் உடைந்து வீழ்ந்ததில், குறித்த குழந்தை உயிரிழந்த சம்பவம், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது ஹட்டன் ஸ்டிரதன் தோட்டத்தைச் சேர்ந்த வை. லக்மிதா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை 0

🕔10.Aug 2016

‘சமகால உலக பிரச்சினைகள்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையொன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறைக்கு, அத்துறையின் தலைவர் எஸ்.எம். ஆலிப் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலரான எம்.எம். பைஸால் இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா 0

🕔10.Aug 2016

– முக்தார் அஹமட் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தரப்பினர், அமைச்சர் பைசர் முஸ்தபாவை, நேற்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து சந்தித்து, சாய்ந்தமருதுக்கான தனி உள்ளுராட்சி சபை தொடர்பில் பேசினர். இதன்போது அமைச்சர் தெரிவிக்கையில்; கடந்த

மேலும்...
முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை 0

🕔10.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜூன்மாதம்  20ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, முஸம்மில் – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும்...
குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை

குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை 0

🕔10.Aug 2016

– எப். முபாரக் – குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு, அப் பிரதேச மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை மாலை அந்தக் கிராமத்துக்கு அருகில் உரையாற்றவுள்ளார். இதன் காரணமாக, அங்குள்ள முஸ்லிம்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்