Back to homepage

பிரதான செய்திகள்

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா 0

🕔10.Aug 2016

– முக்தார் அஹமட் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தரப்பினர், அமைச்சர் பைசர் முஸ்தபாவை, நேற்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து சந்தித்து, சாய்ந்தமருதுக்கான தனி உள்ளுராட்சி சபை தொடர்பில் பேசினர். இதன்போது அமைச்சர் தெரிவிக்கையில்; கடந்த

மேலும்...
முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை 0

🕔10.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜூன்மாதம்  20ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, முஸம்மில் – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும்...
குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை

குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை 0

🕔10.Aug 2016

– எப். முபாரக் – குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு, அப் பிரதேச மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை மாலை அந்தக் கிராமத்துக்கு அருகில் உரையாற்றவுள்ளார். இதன் காரணமாக, அங்குள்ள முஸ்லிம்களுக்கு

மேலும்...
சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு

சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு 0

🕔10.Aug 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் கிடைத்த  157.5 மில்லியன் ரூபா பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நிதி மோசடி விசாரணை பிரிவினர் இன்றைய தினம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக்காலத்தில் சீ.எஸ்.என். நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக

மேலும்...
றிசாத்,  ஹக்கீமை உள்ளடக்கி அமைச்சரவை உபகுழு; ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வுகாண நடவடிக்கை

றிசாத், ஹக்கீமை உள்ளடக்கி அமைச்சரவை உபகுழு; ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வுகாண நடவடிக்கை 0

🕔9.Aug 2016

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்புக்கு தீர்வுகளைக் காணும் பொருட்டு, அமைச்சரவை உபகுழுவொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். தற்காலிகத்  தீர்வொன்றை அவசரமாகக் காணவும், பின்னர் நிலையான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, குறித்த உபகுழுவினை ஜனாதிபதி நியமித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்படி

மேலும்...
சர்மிளா: பதினாறு வருட உண்ணா விரதத்துக்கு முடிவு

சர்மிளா: பதினாறு வருட உண்ணா விரதத்துக்கு முடிவு 0

🕔9.Aug 2016

பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டு வந்த இரும்பு பெண் என்று அழைக்கப்படும், இந்தியா மணிப்பூர் பகுதியை சேர்ந்த இரோம் சர்மிளா தனதுஉண்ணாவிரத போராட்டத்தை இன்று செவ்வாய்கிழமை கைவிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு படையினரால் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், பாதுகாப்பு படையினருக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை நீக்க கோரி சர்மிளா 16வருடங்களாக

மேலும்...
திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔9.Aug 2016

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்தில், அரசியலமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘வற் வரி’ தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் வாசித்தார். இதன்போது, அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள், திருத்தப்பட்ட வற் வரி சட்டமூலத்தில் பினபற்றப்பட்டிருக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் 0

🕔9.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு, மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கிணங்க 355 பேருக்கு நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இந்த நிலையில்

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது 0

🕔8.Aug 2016

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார். உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பளத்தை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க

மேலும்...
பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ்

பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ் 0

🕔8.Aug 2016

பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் வெலிஅத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.சுமார் 40 வயதான பெண்ணொருவர், இசுருபுர – லங்கானந்த மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்தபோது, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, காயமடைந்த அவர், வெலிஅத்த – ஹத்போதிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.காணிப் பிரச்சினை தொடர்பில்

மேலும்...
பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை 0

🕔8.Aug 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, விளக்க

மேலும்...
ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு 0

🕔8.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள், வயதெல்லையின்றி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரம்பும் பொருட்டு, பட்டதாரிகளிடமிருந்து கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.இதன்போது விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து பல்வேறு

மேலும்...
புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு

புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு 0

🕔7.Aug 2016

புகையிரதங்களில் மோதுண்டு 250 பேர், இந்த வருடத்தில் – இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று, புகையிரதத் திணைக்கள அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர், புகையிரதங்களில் மோதி தற்கொலை செய்து கொண்டவர்கள் எனவும் அவர் கூறினார். சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவைப் பகுதிகளிலேயே, இந்த நிலையில், புகையிரத விபத்துக்களைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியட்சகர் அநுர பிரேமரத்ன

மேலும்...
மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔7.Aug 2016

– கே.ஏ. ஹமீட் – மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார். ‘மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு

மேலும்...
மண்ணுக்குள் வீடொன்று முற்றாகப் புதைந்தது; கினகத்தேனயில் அதிர்ச்சி

மண்ணுக்குள் வீடொன்று முற்றாகப் புதைந்தது; கினகத்தேனயில் அதிர்ச்சி 0

🕔7.Aug 2016

– க. கிஷாந்தன் – கினிகத்தேன- பொல்பிட்டிய பகுதியில் வீடொன்று முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. சுமார் 50 அடி ஆழம் வரையில் இந்த வீடு புதைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அப்பகுதியிலுள்ள 04 வீடுகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவை சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இப் பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால், அதில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்