Back to homepage

பிரதான செய்திகள்

உசைன் போல்ட் சாதனை; 100 மீற்றர் பந்தயத்தில், மூன்றாவது முறை தங்கம்

உசைன் போல்ட் சாதனை; 100 மீற்றர் பந்தயத்தில், மூன்றாவது முறை தங்கம் 0

🕔15.Aug 2016

உலகின் வேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமெய்கா நாட்டின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட், றியோ ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார். அந்தவகையில், 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தினை தொடர்ச்சியாக உசைன் போல்ட் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கண்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரன்; பொலிஸார் விசாரணை

கண்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரன்; பொலிஸார் விசாரணை 0

🕔14.Aug 2016

விற்பனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைத் தொகுதியினுள், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்துடன், புலிகளால் தமிழீழம் என அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும் அச்சிடப்பட்ட டீ சேட் கைப்பற்றப்பட்டுள்ளது. கண்டி நகரிலுள்ள  ஆடை விற்பனை நிலையத்தினர், கொள்வனவு செய்திருந்த ஆடைத் தொகுதியினுள்ளிருந்து, இந்த டீ சேட்  கைப்பற்றப்பட்டுள்ளது. டீ சேட்டின் முன்பக்கம் பிரபாகரனின் உருவப்படமும், பின்புறமாக தமிழீழம் என புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும்,

மேலும்...
இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம்

இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம் 0

🕔14.Aug 2016

‘இணைந்த வடக்கு கிழக்கில்தான் அதிகாரங்கள் பகிரப்படுதல் வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்ததன் பின்னர், கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களக்குக் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார். ‘இணைந்த வடக்கு

மேலும்...
அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – நாட்டின் அடுத்த வரவு செலவு திட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்வைக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, யுத்த காலத்தின் போது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள – இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை

மேலும்...
நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம்

நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம் 0

🕔14.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ மீது, கப்பம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டொன்று சுமத்தப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுரேஸ் எதிரிசிங்க எனும் தனது நண்பர் ஒருவரிடமிருந்தே, யோஷித ராஜபக்ஷ கப்பம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சுரேஸ் எதிரிசிங்கவின் தந்தை, வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகராவார். யோஷித்தவின் நண்பரான

மேலும்...
வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம்

வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம் 0

🕔14.Aug 2016

வாக்காளர் இடாப்பில் இவ்வருடம், தமது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளத் தவறியவர்களுக்கு, மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதிவரை வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும்...
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டனில் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவுக்கு அதிகமான சம்பள உயர்வை உனடியாக வழங்குவதற்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டன் நகரில இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீடுகளை வழங்கி, அவற்றின் உரிமையாளர்களாக தோட்டத் தொழிலாளர்களை மாற்ற வேண்டுமென்றும், இந்த ஆர்ப்பாட்த்தின் போது அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை; பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைக்கலாம்

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை; பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைக்கலாம் 0

🕔14.Aug 2016

– றியாஸ் ஆதம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அனுசரணையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாரை கச்சேரிக்கு முன்னால் அமைந்துள்ள உதவிப் பொது முகாமையாளர் (கிழக்கு) காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,

மேலும்...
தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம்

தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம் 0

🕔14.Aug 2016

தென்னிந்திய கவிஞரும், தமிழ்த்திரைப்பட பாடலாசிரியருமான நா. முத்துகுமார், இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார், திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தார். இறக்கும்போது 41 வயதுடைய – நா.

மேலும்...
அரசியல் தீர்வானது, முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத் திணிப்பாக அமைந்து விடக்கூடாது: அப்துர்ரஹ்மான்

அரசியல் தீர்வானது, முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத் திணிப்பாக அமைந்து விடக்கூடாது: அப்துர்ரஹ்மான் 0

🕔14.Aug 2016

– றிசாத் ஏ காதர் – ‘வடக்கு –  கிழக்கு மாகாணங்களுக்கான அரசியல் தீர்வு என்பது, முஸ்லிம் சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாக  அமைந்து விடக்கூடாது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்( NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார். மேலும், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது, மீண்டும் ஒரு முறை திணிக்கப்படுவதனையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர்

மேலும்...
உயர் தரப் பரீட்சை எழுதி விட்டுத் திரும்பிய மாணவர்கள் மீது, கத்திக் குத்து

உயர் தரப் பரீட்சை எழுதி விட்டுத் திரும்பிய மாணவர்கள் மீது, கத்திக் குத்து 0

🕔13.Aug 2016

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மூவர், கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி கத்திக் குத்துச் சம்பவம் இன்று மதியம் அக்குரஸ்ஸ பஸ் நிலையத்தில் இடம்பெற்றது. மேற்படி மாணவர்கள் மீது, இரண்டு நபர்கள் – இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர். கத்திக் குத்துக்கு இலக்கான மூன்று

மேலும்...
கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம்

கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம் 0

🕔13.Aug 2016

கோழி திருடிய ராணுவ சிப்பாய் ஒருவர், நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினை அடுத்து, கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கோழித் திருட்டில் ஈடுபட்ட ராணுவ சிப்பாய், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றல் ஆஜர் செய்யப்பட்ட போதே, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; கிளிநொச்சி – தருமபுரம்

மேலும்...
பிரதமர் ரணில், சீனா பறந்தார்

பிரதமர் ரணில், சீனா பறந்தார் 0

🕔13.Aug 2016

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை சீனா பயணமானார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர், இதன்போது, சீன பிரதமர் உட்பட, பல முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, அங்குள்ள கைத்தொழில் வலயம், தொழில்நுட்ப பூங்கா மற்றும் நிதி கேந்திர நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிடவுள்ளார். பிரதமருடன் அவரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்க,

மேலும்...
உடைத்து ஒட்டுதல்

உடைத்து ஒட்டுதல் 0

🕔13.Aug 2016

–  ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகளின் விருப்பத்திற்குரிய ஒரு பொருளை விளையாடும் போது, சில வேளைகளில் அவர்களே கைதவறி உடைத்து விடுவார்கள். அது உடைந்ததும் அங்குமிங்கும் ஓடியோடி அழுவார்கள். ஏதோ வீட்டில் இருக்கின்ற மற்றவர்களே உடைத்து விட்டத்தைப் போலதான் அவர்கள் ஆர்ப்பரிப்பார்கள். ‘சரி இன்னுமொன்று புதிதாக வாங்குவோம்’ என்று தாய் தந்தையர் சொன்னாலும், இல்லை, அதே

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே 0

🕔13.Aug 2016

உள்­ளுராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது ஜன­நா­ய­க விரோத செயல் என்று, கபே எனப்படும்  நீதி­யா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்­கத்தின் ஏற்­பாட்­டாளர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்தார். இதனை அர­சாங்கமும் உணர வேண்டும் என்றும், அவர் கூறினார். எல்லை நிர்­ணய பணிகள் முழு­வதும் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்