அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

🕔 August 14, 2016

Protest - 097
– க. கிஷாந்தன் –

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவுக்கு அதிகமான சம்பள உயர்வை உனடியாக வழங்குவதற்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டன் நகரில இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீடுகளை வழங்கி, அவற்றின் உரிமையாளர்களாக தோட்டத் தொழிலாளர்களை மாற்ற வேண்டுமென்றும், இந்த ஆர்ப்பாட்த்தின் போது அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டோர், ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் அட்டன் நகரத்தை நோக்கி வருகை தந்து, பிரதான பஸ் தரிப்பிடத்தில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார்கள்.

இதன்போது, தமது கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும்பொருட்டு, பொதுமக்களின் கையெழுத்தும் பெறப்பட்டன.

தோட்ட தொழிலாளர்களுக்குரிய நியாயமான சம்பள உயர்வினை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில், அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.Protest - 099 Protest - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்