உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே

🕔 August 13, 2016

Keerthi Thennakoon - 098ள்­ளுராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது ஜன­நா­ய­க விரோத செயல் என்று, கபே எனப்படும்  நீதி­யா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்­கத்தின் ஏற்­பாட்­டாளர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்தார்.

இதனை அர­சாங்கமும் உணர வேண்டும் என்றும், அவர் கூறினார்.

எல்லை நிர்­ணய பணிகள் முழு­வதும் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலம் தாழ்த்துவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக, அவர் மேலும் தெரிவிக்கையில்;

“உள்­ளுராட்சி தேர்தல் – நாட்டின் சகல மாகா­ணங்­க­ளிலும் நடத்த வேண்டிய தேவையுள்ளது.

எல்லை நிர்­ணயம் முழு­வ­து­மாக நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற இடங்­களில் மாத்­தி­ர­மா­வது தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். தேர்தலை நடத்த காலம் தாழ்த்துவதன் காரணம் என்­ன­வென்று, நீதி­யா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்கம் என்ற ரீதியில் நாம் உரிய கார­ணங்­களை அர­சாங்­கத்­திடம் கேட்­டாலும், போலி­யான காரணங்­களே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.இதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

மேலும் நாட்டில் தற்­போ­தைய நிலையில் 33 கட்­சிகள் பதிவு செய்­யப்­ப­டாமல் இருப்­ப­தாக எமக்கு தக­வல்கள் கிடைத்­தி­ருக்­கின்­றன. காலம் தாழ்த்­தாமல் தேர்தல் நடத்தப்படு­மாயின் அந்தக் கட்­சி­க­ளையும் பதிவு செய்ய முடியும்.

உள்­ளுராட்சி மன்ற தேர்தல் நடத்­தப்­ப­டு­வதன் அவ­சியம் குறித்தும், மக்­களின் வாக்குரிமை பறிக்­கப்­ப­டு­வதன் நிலை­மைகள் குறித்தும் நாம் தொடர்ச்­சி­யாக கடந்த ஜன­வரி மாதம் முதல் அர­சாங்­கத்­துக்கு சுட்டிக் காட்டி வரு­கின்றோம்.

ஆனால், அர­சாங்கம் இதற்­கான முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்­ளாமல் இருப்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பல­வீ­னத்தை நேர­டி­யா­கவே குறித்து காட்­டு­வ­தாக அமைந்தி­ருக்­கின்­றது.

இதன்­படி, உள்­ளு­ராட்சி மன்­றங்கள் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில், மைத்­திரி மற்றும் ரணில் இணைந்த தேசிய அர­சாங்கம், உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா, அவ்­வ­மைச்சின் செய­லாளர், தேர்­தல்கள் ஆணை­யாளர் நாயகம் மஹிந்த தேசப்­பி­ரிய ஆகியோர் காத்­தி­ர­மான கருத்­துக்­க­ளை இது தொடர்பில் முன்­வைக்­காமல் தொடர்ந்தும் மௌனம் காத்து வரு­கின்­றமை நல்­லாட்சி அர­சாங்கத்துக்­கான அடை­யா­ளங்­க­ளாக இல்லை.

அது மட்­டு­மல்­லாது, உரிய காலப்­ப­கு­தியில் தேர்தல் நடத்­தப்­ப­டாமல் காலம் தாழ்த்தி நடத்­தப்­ப­டு­வது பாரி­ய­தொரு குற்­ற­மாக அமையும். அதேவேளை, மக்­களின் உரிமைகளையும் நேர­டி­யாக பறிக்கும் முயற்­சி­யாகும்.

அர­சாங்­கத்­தினால் இவ்­வாறு கார­ணங்கள் கூறப்­ப­டு­வது நேர­டி­யா­கவே ஜனநாயகத்தை மீறும் விதமாக அமைந்திருக்கின்றது. அதேவேளை, இது பாரியதொரு மக்கள் புரட்சிக்கும் வழிவகுத்து விடும். எனவே, நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக் கொண்டு பெயரளவில் மாத்திரம் செயற்படாமல் அதற்கான வழிவகைகளை மைத்திரி – ரணில் இணைந்த தேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்