கண்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரன்; பொலிஸார் விசாரணை

🕔 August 14, 2016

T - Shirt - 01
வி
ற்பனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைத் தொகுதியினுள், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்துடன், புலிகளால் தமிழீழம் என அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும் அச்சிடப்பட்ட டீ சேட் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி நகரிலுள்ள  ஆடை விற்பனை நிலையத்தினர், கொள்வனவு செய்திருந்த ஆடைத் தொகுதியினுள்ளிருந்து, இந்த டீ சேட்  கைப்பற்றப்பட்டுள்ளது.

டீ சேட்டின் முன்பக்கம் பிரபாகரனின் உருவப்படமும், பின்புறமாக தமிழீழம் என புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும், அதனுள் புலிகளின் இலச்சினையும் அச்சிடப்பட்டுள்ளன.

இது குறித்து, ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர், பொலிஸாருக்கு அறிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில், ஆடைகளை அனுப்பி வைத்த நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.T - Shirt - 02

Comments