வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம்
வாக்காளர் இடாப்பில் இவ்வருடம், தமது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளத் தவறியவர்களுக்கு, மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதிவரை வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் போது, 19 வயதானதன் பின்னரே, பலர் வாக்களிக்கும் வாய்ப்பை பெறுவதாக குறிப்பிட்டுள்ள அவர் கூறியுள்ளார்.
எனவே, இனிவரும் காலத்தில் 18 வயதிலேயே வாக்களிக்கும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.