பிரதமர் ரணில், சீனா பறந்தார்

🕔 August 13, 2016

Ranil - 0998பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை சீனா பயணமானார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர்,
இதன்போது, சீன பிரதமர் உட்பட, பல முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அங்குள்ள கைத்தொழில் வலயம், தொழில்நுட்ப பூங்கா மற்றும் நிதி கேந்திர நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிடவுள்ளார்.

பிரதமருடன் அவரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்டோர் பயணிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்