தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம்
தென்னிந்திய கவிஞரும், தமிழ்த்திரைப்பட பாடலாசிரியருமான நா. முத்துகுமார், இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது
தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார், திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தார்.
இறக்கும்போது 41 வயதுடைய – நா. முத்துக்குமார் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
இயக்குநர் சீமானின் ‘வீர நடை’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான முத்துக்குமார், தங்கமீன்கள், சைவம் ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்துக்குமார் எழுதிய நூல்கள்
- நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
- கிராமம் நகரம் மாநகரம்
- பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
- ஆணா ஆவண்ணா
- என்னை சந்திக்க கனவில் வராதே
- சில்க் சிட்டி
- பால காண்டம்
- குழந்தைகள் நிறைந்த வீடு
- வேடிக்கை பார்ப்பவன்