உயர் தரப் பரீட்சை எழுதி விட்டுத் திரும்பிய மாணவர்கள் மீது, கத்திக் குத்து

🕔 August 13, 2016

Knife - 034க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மூவர், கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி கத்திக் குத்துச் சம்பவம் இன்று மதியம் அக்குரஸ்ஸ பஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

மேற்படி மாணவர்கள் மீது, இரண்டு நபர்கள் – இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

கத்திக் குத்துக்கு இலக்கான மூன்று மாணவர்களும், முதலில் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர் எனத் தெரியவருகிறது.

தாக்குதலை மேற்கொண்ட இருவரும் சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீண்ட நாள் பிரச்சினையொன்றின் விளைவாகவே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்