கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

🕔 August 9, 2016
Hafees Naseer - 013– சப்னி அஹமட் –

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு, மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கிணங்க 355 பேருக்கு நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இந்த நிலையில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சர் சி. தண்டாயுத பாணி ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரம சிங்க, ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மீண்டும் 1134 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க அனுமதி கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் தமிழ் மொழியில் 823 பட்டதாரிகளும், சிங்கள மொழியில் 311 பட்டதாரிகளும் விரைவில் நியமிக்கப் படவுள்ளனர் என, முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்