மண்ணுக்குள் வீடொன்று முற்றாகப் புதைந்தது; கினகத்தேனயில் அதிர்ச்சி
🕔 August 7, 2016


– க. கிஷாந்தன் –
கினிகத்தேன- பொல்பிட்டிய பகுதியில் வீடொன்று முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.
சுமார் 50 அடி ஆழம் வரையில் இந்த வீடு புதைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அப்பகுதியிலுள்ள 04 வீடுகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவை சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
இப் பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால், அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாகவே இவ்வீடுகள் பாதிப்படைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
மண்ணுக்குள் புதைந்த வீடு, சுமார் 50 அடி ஆழத்தில் புதையுண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு, ஏற்கனவே அதிகாரிகள் ஊடாக அனுப்பப்பட்டதன் காரணமாக – எவரும் பாதிப்புக்குள்ளாகவில்லை என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டுள வருகின்றனர்.

Comments

