சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு

🕔 August 10, 2016

05சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் கிடைத்த  157.5 மில்லியன் ரூபா பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது.

நிதி மோசடி விசாரணை பிரிவினர் இன்றைய தினம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக்காலத்தில் சீ.எஸ்.என். நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

எனினும், சீ.எஸ்.என். நிறுவனத்துக்கு தான் உரிமையாளர் அல்ல என்று, யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்