சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா

🕔 August 10, 2016

Sainthamaruthu - 0122– முக்தார் அஹமட் –

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தரப்பினர், அமைச்சர் பைசர் முஸ்தபாவை, நேற்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து சந்தித்து, சாய்ந்தமருதுக்கான தனி உள்ளுராட்சி சபை தொடர்பில் பேசினர்.

இதன்போது அமைச்சர் தெரிவிக்கையில்;

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீனிடம்,  இதற்கான உறுதி மொழியினை வழங்கி இருக்கிறேன்.

குறித்த விடயம் தொடர்பான சகல ஆவணங்களையும், அமைச்சர் றிசாத் எம்மிடம் தந்துள்ளார்.  நீங்களும் அது தொடர்பாகவே வந்துள்ளீர்கள். இதனை நான்நி றைவேற்றுவேன்.

மேலும், அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் உங்கள்எ பிரதேசத்துக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளேன். இது தொடர்பில்  முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் என்னை ஒரு தடவை சந்தித்துள்ளார்” என்றார்.

குறுகிய நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில், பள்ளிவாசல் சார்பாக அதன் செயலாளர் அப்துல் மஜீத், உலமா சபை தலைவர் காசிம் மௌலவி, சாய்ந்தமருது வர்த்தக சங்க தலைவர் உஷாம் சலீம் உட்பட 20 இற்கும்   மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Comments