பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போதே, அவரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.கணேசராஜா உத்தரவிட்டார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி, குற்றப்புலனாய்வு பிரிவால் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருந்தார்.