முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில்

🕔 August 11, 2016
Ranil - 014
– அஸ்ரப் ஏ சமத் – 

லங்கையில் யுத்த காலத்தின்போது, முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் அன்னியோன்யமாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து ஓர் இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தியிருந்தனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் ஆரம்ப வைபவம் இன்று வியாழக்கிழமை, கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நாட்டில் இனவாதத்திற்கு ஒரு போதும் இடமில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

சஊதி அரேபியாவில் இருந்து வருகை தந்த, உலக முஸ்லீம் லீக்கின் செயலாளா் கலாநிதி அப்துல்லா பின் அல்-டேக்கிஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,
தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சா் எம்.எச்.ஏ. ஹலீம், ராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தின் தலைவா் முன்னாள் கொழும்பு மேயா் ஹூசைன் முஹம்மத், அகில இலங்கை ஜம்இய்யத்துல்  உலமா சபையின் தலைவா் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி ஆகியோரும் இங்கு உரையாற்றினாா்கள்.

சீனா, மியன்மாா், கம்போடியா, சீனா, இந்தியா பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் சிறுபான்மையினரா வாழும் முஸ்லிம்களின் பிரநிதிகள், உட்பட  11 நாடுகளின் பிரதிநிதிதகள் இம் மாநட்டில் கலந்து கொண்கின்றனர்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போா் கூடத்தில் இன்றும்,   முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, சர்வதேச இஸ்லாமிய நாடுகளுகளிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.Ranil - 012 Ranil - 013

Comments

புதிது பேஸ்புக் பக்கம்