அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக, உதுமாலெப்பை நியமனம்

🕔 August 11, 2016
Uthumalebbe - 096– கே.ஏ. ஹமீட் –

ம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவராக, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை ஜனாதிபதியினால் நேற்று புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரர்களாக, ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அமைச்சர் தயா கமே, ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், நாடாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக கே. கோடிஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான உதுமாலெப்பை, தற்போது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உதுமாலெப்பை ஏற்கனவே – அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்