புதையல் தோண்டியவர்கள் கைது

🕔 August 12, 2016

Welimada - 0133– க. கிஷாந்தன் –

வெலிமடை மிரஹாவத்த வேகொட பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஐவரை பண்டாரவளை பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர்.

பண்டாரவளை பொலிஸ் விசேட குற்றப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் – சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கற்குவாரியொன்றினை நடாத்தி செல்லும் பெயரில், இவர்கள் இவ்விடத்தில் புதையல் தோண்டும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.Welimada - 0134

Comments

புதிது பேஸ்புக் பக்கம்