விளையாடிக் கொண்டிருந்த குழந்தை; மதில் விழுந்து மரணம்

🕔 August 11, 2016

Baby death - 07– க. கிஷாந்தன் –

வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மதில் உடைந்து வீழ்ந்ததில், குறித்த குழந்தை உயிரிழந்த சம்பவம், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது

ஹட்டன் ஸ்டிரதன் தோட்டத்தைச் சேர்ந்த வை. லக்மிதா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மதில் உடைந்து – சிறுமி மீது வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் படுகாயமடைந்த சிறுமி, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments