தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை

🕔 August 10, 2016

SEUSL - 0978
‘ச
மகால உலக பிரச்சினைகள்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையொன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறைக்கு, அத்துறையின் தலைவர் எஸ்.எம். ஆலிப் தலைமை தாங்கினார்.

சமூக ஆர்வலரான எம்.எம். பைஸால் இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டார்.

இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அரசியல்துறை விரிவுரையாளர் எம்.எம். பாஸில், சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. றமீஸ், விரிவுரையாளர்களான எம்.ஏ.எம். பௌஸர், எம். றிஸ்வான், பொறியில் பீட விரிவுரையாளர்களான எம்.பி. முர்ஷித், ஏ. ஜே. சபத்துல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கில், இப் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.SEUSL - 0977 SEUSL - 0976

Comments

புதிது பேஸ்புக் பக்கம்