ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

🕔 August 11, 2016

Parliament - 0011நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை சற்று முன்னர் ஒத்தி வைக்கப்பட்டது.

ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றுக்கு கறுப்புப் பட்டியணிந்து வந்து எதிர்ப்பு வௌியிட்டதையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது பற்றிய சட்டமூலம், இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கபட்ட நிலையில், ஒன்றிணைந்த எதிரணியினர் இவ்வாறு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தை சபாநாயகர் ஒத்தி வைத்ததோடு, கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்