ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி

🕔 August 11, 2016

Jhonston - 0989நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிறாடு செல்வதற்கு விதித்திருந்த தடையினை கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய, இன்று வியாழக்கிழமை நீக்கி உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கடந்த ஐந்தாண்டுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பெற்ற கடன்கள் தொடர்பான தகவல்களை, நீதிமன்றில் வெளியிடத் தவறியமை காரணமாக, அவர் வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தனது மனைவிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு ஜோன்ஸ்டன் பெனாண்டோ மனு ஒன்றை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிணங்க, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி வரை, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணயங்களுக்கான தடை நீக்கப்படுவதாக நீதவான் அறிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்